தமிழகத்தில் நாளை ஜனவரி 28 புதன்கிழமை விடுமுறை அறிவிப்பு!.. மாணவர்களுக்கு குஷியான தகவல்! School Leave Jan 28 Local Holiday Announce

School Leave Jan 28 Local Holiday Announce

தமிழகத்தில் நாளை ஜனவரி 28 புதன்கிழமை விடுமுறை அறிவிப்பு!.. மாணவர்களுக்கு குஷியான தகவல்!

 

முக்கிய செய்திகள்

School Leave Jan 28 Local Holiday Announce: தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்ற தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் நன்னீராட்டு பெருவிழா வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.

School Leave Jan 28 Local Holiday Announce

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

இச்செய்தி தொகுப்பின் முழு விபரத்தையும் கீழே காணலாம்.

கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில்

கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் ஆனது பக்தர்களால் தென்திருப்பதி என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நாளை புதன்கிழமை நன்னீராட்டு பெருவிழாவானது நடைபெற உள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்த பெருவிழாவை முன்னிட்டு 28. 01. 2026 அன்று கரூர் மாவட்டம் கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும் அதே நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த தேர்வுகளுக்கு சம்பந்தப்பட்ட மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அத்தியாவசிய பணிகளுக்கும் விடுப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக 07. 02 .2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்மீக மரபுகளை போற்றும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்கும் வசதியை நோக்கமாகக் கொண்டு இந்த விடுமுறை உள்ளூர் விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.

School Leave/ school leave tomorrow/ school leave 2026/school holiday/ tamilnadu school leave/ tn school leave

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top