ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2026-8 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே!- உடனே அப்ளை பண்ணுங்க..
TN Rural Development Department Job Sivagangai 2026
TN Rural Development Department Job Sivagangai 2026: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி இருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணலாம்.
இவ்வேலைவாய்ப்பை குறித்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படியுங்கள்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருக்கின்ற இப்போ ஓட்டுனர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடமானது நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30.1.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈப்பு ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2026/01/17688874179021.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம் – 630551
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Official Notification: – Click Now
TN Govt Jobs 2026/ Rural Department Job Notification 2026/ govt jobs 2026/ Job News 2026/ Job News / Trend Job News/ Latest Job News/TNRD Recruitment 2026
