இந்திய அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2026- தேர்வு கிடையாது, 28740 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
Indian Post Office GDS Recruitment 2026 Apply Full Details
Indian Post Office GDS Recruitment 2026 Apply Full Details : இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்ற இந்த வேலை வாய்ப்பிற்கு தமிழகத்தில் 2009 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் மொத்தமாக 28, 740 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறை ஜிடிஎஸ் வேலைவாய்ப்பு 2026- எவ்வாறு விண்ணப்பிப்பது, மேலும் இப்பணியை குறித்து முழு விவரத் தொகுப்பும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிக்கு தான் செல்ல வேண்டும் என்று கனவோடு இருப்பவர்களுக்கு இது ஜாக்பாட் அறிவிப்பு!- எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் படித்து நாம் தகுதி உள்ளோமா என்று தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்களும் அடங்கும்.
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஜனவரி 31, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026
கட்டணம் செலுத்த கடைசி நேரம்: பிப்.16, 2026 (மாலை 5 மணி வரை)
திருத்தம் செய்யும் காலம் (Correction Window): பிப்ரவரி 18 மற்றும் 19, 2026
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
கல்வி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எவ்விதத் தேர்வும் கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பள விவரம்:
ABPM மற்றும் GDS: மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.
BPM: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.
முக்கிய மாநில வாரியான காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 28,740 இடங்களில் சில முக்கிய மாநிலங்களின் விவரம்:
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/01/26/screenshot-2026-01-26-203021-2026-01-26-20-31-43.png)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பிப்ரவரி 18-19 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் பிப்.28-ஆம் தேதி வெளியாகும். அதில் விண்ணப்பதாரரின் பதிவு எண், மதிப்பெண் சதவீதம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
Indian Post Office GDS Recruitment 2026/ GDS Recruitment 2026/ Post Office 10th job Notification/ Indian Post Office Recruitment 2026 /post office job 2026/Job news tamil/ central Govt job 2026/
