இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2026: 22,195 காலியிடங்கள்!
RRB Group D Recruitment 2026 Apply Now
RRB Group D Recruitment 2026 Apply Now : இந்திய ரயில்வே துறையில் (RRB) காலியாக உள்ள Level 1 (Group D) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.

வேலைவாய்ப்புத் தகவல் சுருக்கம்
| விபரம் | விளக்கம் |
| நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
| பணியின் பெயர் | Level 1 (Group D) |
| மொத்த காலியிடங்கள் | 22,195 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 31.01.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 02.03.2026 |
தகுதிகள் மற்றும் விபரங்கள்
கல்வித் தகுதி:
-
10-ஆம் வகுப்பு (SSLC/Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
-
ITI (NCVT/SCVT அங்கீகாரம் பெற்றது) முடித்திருக்க வேண்டும். (அல்லது)
-
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.01.2026 தேதியின்படி):
-
குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள்
-
அதிகபட்சம்: 33 ஆண்டுகள்
-
(அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10-15 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு).
சம்பளம்:
-
மாதம் Rs. 18,000/- (இதனுடன் இதர மத்திய அரசு படிகளும் உண்டு).
தேர்வு செய்யும் முறை (Selection Process)
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
-
Computer Based Test (CBT): கணினி வழி எழுத்துத் தேர்வு.
-
Physical Efficiency Test (PET): உடற்தகுதித் தேர்வு.
-
Document Verification (DV): சான்றிதழ் சரிபார்ப்பு.
-
Medical Examination (ME): மருத்துவப் பரிசோதனை.
விண்ணப்பக் கட்டணம்
-
SC / ST / பெண்கள் / திருநங்கைகள் / PwBD / EBC: ₹250/-
-
இதர பிரிவினர்: ₹500/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்துப் பார்க்கவும்.
| முக்கிய இணைப்புகள் | லிங்க் |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | இங்கே கிளிக் செய்யவும் (PDF) |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | இங்கே கிளிக் செய்யவும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | rrbapply.gov.in |
